![]() |
| Thirukolakudi car festival |
![]() |
| திருக்கோளக்குடி கோவில் |
இங்கு மொத்தம் நான்கு ஆலயங்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தில் சிவன் பொய்யாமொழிசுவராக அருள்பாளித்து வருகின்றார். அறுபது படிகள் ஏறி குன்றின் மய்ய பகுதியில் சிவன் திருக்கோளநாதராக வீற்றிருக்கிறார். அருகில் தெற்கு பக்கத்தில் அம்பாள் ஆத்மநாயகியாக காட்சியளிக்கிறார். குன்றின் உச்சிக்கு சென்றால் முருகன் ஆலயமும் உள்ளது. அதற்கு அருகில் உள்ள பெரிய பாறை ஒன்றின் உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது ஆனால் அங்கு அவ்வளவு எளிதில் பக்தர்களால் செல்ல முடியாது.
பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் ஒரு குடைவரை கோவில் ஆகும். இங்கு குடைவரையில் குன்றின் பாறையிலேயே செதுக்கப்பட்ட விநாயகர் ஆலயமும் உள்ளது.
''சிவ தலங்களில் இந்த திருக்கோளக்குடி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் காயிலாயத்திற்கு ஈடானதாகவும் கூறப்படுகிறது''
அகத்தியர் தவம் செய்த தலமாகும்.
ஆனித்திருவிழா
![]() |
| கொடிமரம் |
முதலாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆனித்திருவிழா அன்று சுவாமி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்படும். அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெறும்.
அன்றிலிருந்து பத்து நாட்களுக்கு காலையிலும் இரவிலும் சாமி ஊர்வலமும் ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டார கிராமமக்களின் மண்டகபடியும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானங்களும் வழங்கப்படும். 5 ஆம் நாள் குன்றக்குடி அடிகளார் அவர்களின் மண்டகபடியும் நடைபெறும்.
![]() |
| தேர் |
![]() |
| திருக்கோளநாதரும் ஆத்மநாயகியும் |
10ம் நாள் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடைபெறும். 11 ம் நாள் அதிகாலை மீண்டும் சாமி மலை ஏறும் நிகழ்வு நடைபெறுவதோடு ஆனித்திருவிழா நிறைவுபெறும்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக