பிரபல அமேரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் என்ற நபருக்கு தமிழ் டாப் யூடியூபர்கள் இணைந்து சென்னையில் ஆறு இடங்களில் மிகப்பெரிய கட்அவுட்கள் வைத்துள்ளனர்.
காரணம்;
2019ம் வருடத்தில் உலகத்தில் அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூபர்களாக அமேரிக்காவை சார்ந்த பியூடிபை மற்றும் இந்தியாவை சேர்ந்த டி சீரிஸ் நிறுவனமும் இருந்தது. இந்நிலையில் டிசீரிஸ் நிறுவனம் இந்திய மக்களிடையே வீடியே ஒன்றை வெளியிட்டு உலகிலேயே அதிக சந்தாதார்ர்களை கொண்ட யூடியூப் சேனலாக இந்தியாவை சேர்ந்த சேனல் தான் இருக்க வேண்டும் என்றும் அதனால் அமேரிக்க சேனலான பியூடிபை னேனலை பின்னுக்கு தள்ள டீசிரிஸ் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுமாறு கூறியது..
இதனை தொடர்ந்து இந்தியர்கள் பலரும் டீசிரிஸ் சானலுக்கு சப்ஸ்க்கிரைப் செய்து அமேரிக்க பியூடிபை சேனலை பின்னுக்கு தள்ளி இந்திய டீசீரிஸ் சேனலை உலகின் அதிக சப்ஸ்க்ரைப்பர் உள்ள சேனலாக கொண்டு வந்தனர். அதற்கு பியூடிபை கார்பரேட் சேனல்களை மக்கள் ஆதரிப்பதை தவிற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.. அந்த போட்டியில் பியூடிபை தோற்றுபோனார்.
அதன் பிறகு டீசிரிஸ் நிறுவனம் ஹிந்தி படங்களின் பாடல்களை வெளியிட்டுவந்தது .. அந்த பாடல்களை மற்ற தனிநபர் யூடியூப் சேனல்கள் பயன்படுத்தினாலோ அல்லது அந்த பாடல்களை பாடினாலோ அந்த சேனல்களுக்கு காபிரைட்ஸ் ஸ்ட்ரைக் கொடுத்து வந்துள்ளது..
A2D CHANNEL :
இந்நிலையில் தான் 5வருடங்கள் கழித்து மீண்டும் உலகின் அதிக சப்ஸ்க்கரைபர் கொண்ட சேனல் என்ற இடத்திற்கு போட்டியாக மிஸ்டர் பீஸ்ட் என்ற தனிநபரால் நடத்தப்படும் சேனல் போட்டிக்கு வந்தது. இதனை கண்ட டீசிரிஸ் நிறுவனம் மீண்டும் இந்திய மக்களிடையே அமேரிக்க சேனலை தோற்கடித்து இந்திய சேனலை மீண்டும் வெற்றி பெற வைக்குமாறு கூறி வீடியே வெளியிட்டு இருந்தது..
ஆனால் இந்த முறை மக்கள் ஒரு நிறுவனத்தை வெற்றி பெறவைப்பதை விட தனிநபரை வெற்றி பெற வைப்பதுதான் சிறந்தது என்றும் அப்பொழுதுதான் சமூக ஊடகங்கள் மக்களின் கைகளில் இருக்கும் என்றும் இது போன்ற நிறுவனங்களை ஆதரிப்பது என்றும் சமூக ஊடகங்களில் தனிநபருக்கான வாய்பை தட்டிபரிக்கும் என்பதால் இம்முறை மக்கள் டீசிரிஸ் சேனலை ஆதரிக்கவில்லை..
சமூக ஊடகம் என்பது சமூகத்தில் இருந்து ஒருவர் வீடியோக்களை உருவாக்கி ஆதனை சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார். அந்த வீடியோவை இந்த சமூகத்தில் வசிக்கும் மக்களாகிய நாம் பார்கின்றோம், அதற்கு பெயர்தான் சமூக ஊடகம் ஆகும்.
இதில் நிறுவனங்கள் சமூகஊடகங்களை ஆக்கிரமித்து தனிநபர் உருவாக்கும் வீடியோக்களுக்கு ஸ்ட்ரைக் குடுப்பது என்பது மிகவும் கண்டிக்க தக்கதென்றும் இது தனி நபர் உருவாக்கும் சேனல்ளை பாதிக்கும் என்றும் A2D டெக் சேனல் நந்தகுமார் அவரது வீடியோவில் தெரிவித்ததோடு அமேரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்டிற்கு சப்ஸ்க்ரைப் செய்து டீசிரிஸ் சேனலை பின்னுக்கு தள்ளி தனிநபர் சேனலான மிஸ்டர் பீஸ்ட்டை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறி அவரது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்..
மிஸ்டர் பீஸ்டின் வெற்றி;
அனைவரும் எதிர்பார்த்தது போலவே டீசிரிஸ் நிறுவனத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி மிஸ்டர் பீஸ்ட் என்ற தனிநபர் உலகின் அதிக சப்ஸ்க்ரைபர் கொண்ட யூடியூப் சானலாக உருவெடுத்துள்ளார்.. இது உலகில் உள்ள அனைத்து தனி நபர் வீடியோ கிரியேட்டர்களின் வெற்றியாகவே பார்க்கபடுகின்றது.
278 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று உலகின் நம்பர் ஒன் யூடியூபராக உருவவெடுத்துள்ள மிஸ்டர் பீஸ்டிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக A2D சேனல் நந்தகுமார் தமிழில் உள்ள டாப் யூடியூபர்களுடன் இணைந்து நான்கு லட்சம் செலவில் சென்னையில் ஆறு இடங்களில் மிஸ்டர் பீஸ்டிற்கு பில்போர்டு வைத்துள்ளார்..
இதில் நந்தகுமாருடன் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி, விஜே சித்து, இர்பான், ஜேகே, பிளிப்பிளிப்,மதன்கௌரி, தருன்குமார் ஆகிய யூடியூபர்கள் இணைந்து வைத்துள்ளனர்..
A2D நந்தகுமார்;
இது குறித்து நந்தகுமார் அவரது வீடியோவில் தெரிவித்திருப்பதாவது சமூக ஊடகங்கள் என்றும் சமூகத்தின் கையிலேயே இருக்க வேண்டும் என்றும் இந்த வெற்றி மிஸ்டர் பீஸ்டிற்கானது மட்டுமள்ளாது இந்த தனிநபர் VS கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து அதில் தோற்று போன பியூடிபை கான வெற்றியாக இதை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்...
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக