குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாங்காஃப் பகுதியில் உள்ள பணியாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்ப்பட்ட தீவிபத்தில் 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்..
தீவிபத்து;
கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தான் புதன் கிழமை காலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.. அடுக்குமாடி குடியிருப்பின் சமையலரையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ மளமள வென்று பரவி அங்கிருந்த சமையல் சிலிண்டர்களிலும் தீபற்றி எரிந்துள்ளது.. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் தீயில் கருகியும் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவிய கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக கீழே குதித்தும் 40 மேற்பட்ட தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த குவைத் அரசாங்கம் முழுவீச்சில் தீயணைக்கும் பணியிலும் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் சமையல் அறையில் ஏற்பட்ட மின்கசிவே தீவிபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது..
இந்தியாவின் நடவடிக்கை
தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனே அங்கு சென்று முகாமிட்டு மீட்புபணிகளில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகின்றனர்..
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி , தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி உத்திரவின் பேரில் குவைத் நாட்டிற்கு விரைந்துள்ள வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரிப்பதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் குறித்து ஆய்வு செய்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக