கடந்த 12ம் தேதி அதிகாலை குவைத் நாட்டின் மாங்காஃப் பகுதியில் உள்ள இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 5 பேர் தமிழர்கள் என்றும் 29 பேர் மலையாளிகள் என்று தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல்களை தங்களிடம் கொண்டுவந்து தருமாறு மத்திய மாநில அரசாங்ககளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துவருகின்றனர். உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இங்கு கொண்டு வருவது குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யவேண்டிய உதவிகள் குறித்தும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் தாங்கள் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இனைந்து அலோசனை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 29 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பது கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டுவருவதற்கும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்..
விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு வேண்டிய உதவிகளை குவைத் நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் செய்து வருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஆஃபிரகாம் என்பவருக்கு சொந்த மான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
தீயில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் தீபற்றி எரிந்ததால் அவர்களால் வெளியே வரமுடியாமல் கட்டிடத்தின் மாடிக்கு செல்ல முயன்றுள்ளனர் ஆனால் அந்த கதவு பூட்டபட்டு இருந்ததால் மாடிக்கும் செல்லமுடியால் தவித்துள்ளனர் அப்போது கரும்புகை பரவி மூச்சுதிணறல் எற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக சன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு கீழே குதித்ததில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாவலரின் அறையில் தீபற்றகூடிய பொருள் இருந்ததா என்று விசாரனை நடைபெற்று வருகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக