ஹுன்டாய் கம்பனி 1967ல் தென்கொரிய நாட்டில் சுங்-யூ-யுங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட இந்த நிறுவனம் பல லட்சம் கார்களை விற்றுள்ளது.
இந்த கம்பனியை தொடங்கிய சுங்-யூ-யுங் வடகொரிய நாட்டை சேர்ந்தவராவார். அதாவது 1950 முன்பு வரை வடகொரியாவும் தென்கொரியாவும் ஒன்றாக தான் இருந்தது. வடகொரியாவின் ஒரு கிராமத்தில் விவசாயகுடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் இவரது குடும்ப சூழலால் கல்வியை தொடரமுடியாத இவர் அவரது அப்பாவுடன் பண்ணை ஒன்றில் வேலை செய்தார்.
அங்கு வேலை செய்ய பிடிக்காத இவர் தனது நன்பருடன் 4 முறை அவரது வீட்டில் இருந்து தப்பி சென்று சில இடங்களில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால் அவரது தந்தை இவரை கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார். அதன் பிறகு வடகொரியாவிலேயே 1940 காலகட்டத்தில் அவரது நண்பர் ஒருவருடைய கேரேஜை வாங்கி கார்கலை பழுதுபார்க்கும் வேலையை தொடங்கினார்.
3 ஆண்டுகளில் 20 பணியாளர்களுடன் சிறப்பாக பணிகளை செய்துவந்த இவருக்கு ஜப்பான் ஏகாதிபத்தியத்தியத்தால் இடையூருகள் ஏற்படவே மீண்டும் தென்கொரியாவிற்கு செல்ல நினைத்த இவருக்கு அங்கு சென்று தொழில் தொடங்க பணம் தேவைபட்டது. அந்த பணத்தேவைக்காக அவரது தந்தையின் பண்ணையில் இருந்த ஒரு மாட்டை விற்று அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தென் கொரிய நாட்டிற்கு வந்துள்ளார். தென்கொரியாவில் சுங்-யூ-யுங் ஹுன்டாய் மோட்டார் கம்பனியை உருவாக்கி தொழிலை தொடங்கினார்.
இந்த நிலையில் தான் 1950ல் தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் மூண்டது. 3 ஆண்டுகளுக்கு பின் போர் முடிவுக்கு வந்த நிலையில் தான் வடகொரியா தங்களது நாட்டை மூடி வடகொரிய நாட்டை சார்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடைவிதித்தது. இதனால் சுங்-யூ-யுங் கின் பெற்றோர் வடகொரியாவிலும் சுங் தென்கொரியாவிலும் மாட்டிக் கொண்டனர்.
அதன் பிறகு சுங் கின் ஹுன்டாய் நிறவனம் பன்மடங்கு வளர ஆரம்பித்து உலகளாவிய அளவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. அதன் பிறகு ஹுன்டாய் ஒனர் சுங் தென்கொரியாவின் உட்கட்டமைப்புகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.
வடகொரிய தென்கொரிய பிரிவிற்கு பிறகு இருநாடுகளுக்கும் இடையே யாரும் சென்றது கிடையாது. இந்நிலையில் தான் 1998ல் சுங் 1001 மாடுகளுடன் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு செல்ல முடிவு செய்தார். காரணம் இவர் வடகொரியாவிலிருந்து தென்கொரிய நாட்டிற்கு வரும்பொழுது பணத்தேவைக்காக ஒரு மாட்டை விற்று தான் தென்கொரியா வந்தார். அந்த ஒரு மாட்டிற்காக 1000 மடங்கு தான் திருப்பி தருவதற்காகவே 1001 மாடுகளுடன் தென்கொரிய எல்லையை தாண்டி வடகொரியாவிற்கு சென்றார். கொரியா இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு இந்த எல்லையை கடந்து சென்ற முதல் நபராவார்.
அது மட்டுமல்லாது வடகொரியாவின் வளர்சிகாகவும் நிதி வளங்க திட்டமிட்டிருந்தார் சுங்-யூ-யுங்..
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக