சனி, 15 ஜூன், 2024

மஹாராஜா படம் எப்படி இருக்கு..? MAHARAJA movie review.. vjs new movie.. யாருடா அந்த லக்‌ஷ்மி..?

 


மஹாராஜா 

               விஜய் சேதுபதியின் 50 வது படம் மஹாராஜா. ஜுன் 14 தேதி வெளியான இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதனின் இரண்டாவது படமாகும்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி, அபிராமி , அனுராக் காஷ்யப் மற்றும் மம்தா  மோகன்தாஸ்  நடராஜன் சுப்ரமணியம், அபிராமி, முனிஷ்காந்த், சிங்கம் புலி மற்றும் பலர் துணைநடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தில் விஜய் சேதுபதி முடி திருத்தும் கடை நடத்துபவராக வருகிறார். இவரது மனைவி விபத்தில் உயிரிழந்த நிலையில் இவரது மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் சேதுபதி வீட்டில் கொள்ளை நடைபெறுகின்றது. அது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறார் விஜய் சேதுபதி.  அங்கு தொடங்கிய கதையின் விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் படத்தின் இறுதி வரை தொடர்கிறது. 

படத்துன் முதல் பாதியில் இடம் பெறும் பல காட்சிகள் எதற்காக வருகிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது படத்தின் இரண்டாம் பகுதி தொடங்கியவுடன் தான் இதுக்கு தான் அதுவா என்று ரசிகர்களை வியக்க வைத்ததுள்ளார் இயக்குனர் நிதிலன். தனது 50 வது படத்தில் பெரிதாக ஆரவாரம் இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களை ஆரவாரம் செய்யவைத்துவிட்டார்.

சில வருடங்களாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களை விட அவர் வில்லனாக நடித்த படங்களே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அதை உடைத்துள்ளார் விஜய் சேதுபதி.  

மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  படத்தில் காதல் காட்சிகள் பாடல்கள் நகைச்சுவைகளுக்கு பெரிதாக இடமில்லை என்றாலும் படம் பக்கா மாஸ்..  மேலும் படத்தின் எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர்களும் மிகச் சிறப்காக செயல் பட்டிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

  நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்ன...