நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்னு கேட்டா பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிச்சிரும் என்று சொல்லியிருப்பாங்க..
நீங்களும் நீயூஸ்ல பாத்திருப்பிங்க பெட்ரோல் போடும் போது செல் போன் யூஸ் பண்ணதால தீ பிடிச்சிருக்கு என்று நியூஸ்ல போட்டுருப்பாங்க அதையும் பாத்திருப்பிங்க.. ஆனா உன்மையிலே பெட்ரோல் போடும் போது போன் யூஸ் பண்ணா தீ பிடிக்கும் அப்படினா. ஏன் பங்க் ல பெட்ரோல் போட்டுட்டு செல்போனில் UPI மூலம் பணம் அனுப்பும் போது மட்டும் தீ பிடிக்காதது ஏன்...?
''ஏன்னா பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்றதால தீ பிடிக்காது''
செல்போன்ல இருந்து வர்ற (ELECTRO MAGNATIC WAVES) மின் காந்த அலைகள் அல்லது காந்த அலைகள். இந்த காந்த அலைகள் னால நம்ம உடலில் உள்ள மென்மையான பகுதிகள் கூட அதிர்வை உண்டு பண்ண முடியாது அப்படி இருக்கும் போது செல்போன்ல இருந்து வர்ற இந்த அலைகள்னால ஒரு தீ பொறியை உண்டு பண்ணி பெட்ரோல எரியவைக்க முடியாது.
அடுத்த தா செல்போன் பேட்டரிய எடுத்துகிட்டாலும் நாம யூஸ் பண்ற செல்போன் பேட்டரிகள்ள மூன்று விசயம் இருக்கும்
*ANODE(ஆனோடு)
*CATHODE(கேத்தோடு)
*ELECTROLYTE(எலக்ட்ரோலைட்)
இந்த மூன்றும். ஆனோட் மற்றும் கேத்தோட் பிளேட்ஸ் ஆகவும் எலக்ட்ரோலைட் திரவமாகவும் இருக்கும். இவை காற்று போகாத அளவுக்கு மூடப்பட்டு இருக்கும்.
போன் பேட்டரில இருக்க கரண்ட் அளவு 4.2 V தான் இருக்கும். இந்த 4.2வோல்ட் னால தீய உண்டு பண்ண முடியாது. இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும் செல்போன் ஓட இன்டர் நெட் ஆலயும் தீ உண்டுபண்ண முடியாது செல்போன் பேட்டரினாலயும் தீப்பொறிய உண்டு பண்ணமுடியாது. அதனால பெட்ரோல் போடும் போது தீ பிடிக்கிறதுக்கிறதுக்கு செல்போன் காரணம் இல்லை..
அப்பறம் எப்படி தீ பிடிக்கிறதுனா அதுக்கு காரணம் ELECTRO STATIC DISCHARGE (நிலை மின்னியல்)
![]() |
| எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ் |
இது பொருட்கள் ஒன்றோடு ஒன்றும் மோதும் போது உருவாகிறதாகும். அப்படி உருவாகிற சார்ஜ் ஆனது ஒரு கடத்தி அதற்கு கிடைக்கும் போது கடந்து போகிடும். உதாரணத்திற்கு இடி மின்னல் இப்படி தான் உருவாகிறது. மேகங்களில் உறாய்வால் தான் இடி மின்னல் உருவாகி மரங்கள் மாதிரியான கடத்திகள் மூலம் பூமிக்கு போகிறது..
இதே எலக்ட்ரிக் ஸ்டாடிக் சார்ஜ் நாம வண்டி ல ரொரம்ப தூரம் போகும் போது நம்ம கால் தரையில படாது. நாம வண்டியோட சீட்ல உராய்ந்து கொணு்டுதான் போகிட்டு இருப்போம் அப்போ நம்ம உடம்பில் இந்த எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ் உருவாகும்.
அப்படி உருவாகிற அந்த சார்ஜ் நம்ம உடல்ல இருந்து கடந்து போறதுக்கு ஒரு வழி கிடைக்கும் போது தீ பொறியா கடந்து போகிடும். நம்ம உடலில் இது உருவானாலும் நம்மனால இத உணர முடியாது. அப்படி நாம வண்டில போகும் போது நம்ம வண்டி சீட் ல நாம உராய்வதன் காரணம உருவாக கூடிய இந்த எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ் தான் சில சமயங்களில நாம பங்க்ல பெட்ரோல் போடும் போது வெளிப்பட்டு தீ பிடிக்கிறதுக்கு காரணமாக அமைகிறது.
அது மட்டும் இல்லாமல் நாம வண்டிய ஆஃப் பண்ணாம பெட்ரோல் போடுறதாலயும் தான் தீ பிடிக்குமே தவிர செல்போன் காரணம் இல்லை..
.jpg)








.png)
.png)
.png)
.png)

.png)

