வியாழன், 27 ஜூன், 2024

என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

 

நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்னு கேட்டா பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிச்சிரும் என்று சொல்லியிருப்பாங்க.. 

நீங்களும் நீயூஸ்ல பாத்திருப்பிங்க பெட்ரோல் போடும் போது செல் போன் யூஸ் பண்ணதால தீ பிடிச்சிருக்கு என்று நியூஸ்ல போட்டுருப்பாங்க அதையும் பாத்திருப்பிங்க..  ஆனா உன்மையிலே பெட்ரோல் போடும் போது போன் யூஸ் பண்ணா தீ பிடிக்கும் அப்படினா. ஏன் பங்க் ல பெட்ரோல் போட்டுட்டு செல்போனில் UPI மூலம் பணம் அனுப்பும் போது மட்டும் தீ பிடிக்காதது ஏன்...?

''ஏன்னா பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்றதால தீ பிடிக்காது''



செல்போன்ல இருந்து வர்ற (ELECTRO MAGNATIC WAVES) மின் காந்த அலைகள் அல்லது காந்த அலைகள். இந்த காந்த அலைகள் னால நம்ம உடலில் உள்ள மென்மையான பகுதிகள் கூட அதிர்வை உண்டு பண்ண முடியாது அப்படி இருக்கும் போது செல்போன்ல இருந்து வர்ற இந்த அலைகள்னால ஒரு தீ பொறியை உண்டு பண்ணி பெட்ரோல எரியவைக்க முடியாது. 

அடுத்த தா செல்போன் பேட்டரிய எடுத்துகிட்டாலும் நாம யூஸ் பண்ற செல்போன் பேட்டரிகள்ள மூன்று விசயம் இருக்கும் 

*ANODE(ஆனோடு)

*CATHODE(கேத்தோடு)

*ELECTROLYTE(எலக்ட்ரோலைட்)

இந்த மூன்றும். ஆனோட் மற்றும் கேத்தோட் பிளேட்ஸ் ஆகவும் எலக்ட்ரோலைட் திரவமாகவும் இருக்கும். இவை காற்று போகாத அளவுக்கு மூடப்பட்டு இருக்கும். 

போன் பேட்டரில இருக்க கரண்ட் அளவு 4.2 V தான் இருக்கும். இந்த 4.2வோல்ட் னால தீய உண்டு பண்ண முடியாது. இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும் செல்போன் ஓட இன்டர் நெட் ஆலயும் தீ உண்டுபண்ண முடியாது செல்போன் பேட்டரினாலயும் தீப்பொறிய உண்டு பண்ணமுடியாது. அதனால பெட்ரோல் போடும் போது தீ பிடிக்கிறதுக்கிறதுக்கு செல்போன் காரணம் இல்லை..

அப்பறம் எப்படி தீ பிடிக்கிறதுனா அதுக்கு காரணம் ELECTRO STATIC DISCHARGE (நிலை மின்னியல்)

எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ்


 இது பொருட்கள் ஒன்றோடு ஒன்றும் மோதும் போது உருவாகிறதாகும். அப்படி உருவாகிற சார்ஜ் ஆனது ஒரு கடத்தி அதற்கு கிடைக்கும் போது கடந்து போகிடும். உதாரணத்திற்கு இடி மின்னல் இப்படி தான் உருவாகிறது. மேகங்களில் உறாய்வால் தான் இடி மின்னல் உருவாகி மரங்கள் மாதிரியான கடத்திகள் மூலம் பூமிக்கு போகிறது.. 

இதே எலக்ட்ரிக் ஸ்டாடிக் சார்ஜ் நாம வண்டி ல ரொரம்ப தூரம் போகும் போது நம்ம கால் தரையில படாது. நாம வண்டியோட சீட்ல உராய்ந்து கொணு்டுதான் போகிட்டு இருப்போம் அப்போ நம்ம உடம்பில் இந்த எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ் உருவாகும். 

அப்படி உருவாகிற அந்த சார்ஜ் நம்ம உடல்ல இருந்து கடந்து போறதுக்கு ஒரு வழி கிடைக்கும் போது தீ பொறியா கடந்து போகிடும். நம்ம உடலில் இது உருவானாலும் நம்மனால இத உணர முடியாது. அப்படி நாம வண்டில போகும் போது நம்ம வண்டி சீட் ல நாம உராய்வதன் காரணம உருவாக கூடிய இந்த எலக்ட்ரோ ஸ்டாடிக் சார்ஜ் தான் சில சமயங்களில நாம பங்க்ல பெட்ரோல் போடும் போது வெளிப்பட்டு தீ பிடிக்கிறதுக்கு காரணமாக அமைகிறது. 

அது மட்டும் இல்லாமல் நாம வண்டிய ஆஃப் பண்ணாம பெட்ரோல் போடுறதாலயும் தான் தீ பிடிக்குமே தவிர செல்போன் காரணம் இல்லை.. 


திங்கள், 24 ஜூன், 2024

திருக்கோளக்குடியும் தேரோட்டமும்.. திருக்கோளநாதர், ஆத்மநாயகி அம்பாள் திருத்தேரோட்டம்..

Thirukolakudi car festival 



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது திருக்கோளக்குடி கிராமம். இங்கு மலைக்குன்றின் மீது சிவன் திருக்கோளநாதராகவும் அம்பாள் ஆத்மநாயகியாகவும் தோன்றி அருள்பாளித்து வருகின்றனர். 

திருக்கோளக்குடி கோவில்


இங்கு மொத்தம் நான்கு ஆலயங்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தில் சிவன் பொய்யாமொழிசுவராக அருள்பாளித்து வருகின்றார். அறுபது படிகள் ஏறி குன்றின் மய்ய பகுதியில் சிவன் திருக்கோளநாதராக வீற்றிருக்கிறார். அருகில் தெற்கு பக்கத்தில் அம்பாள் ஆத்மநாயகியாக காட்சியளிக்கிறார். குன்றின் உச்சிக்கு சென்றால் முருகன் ஆலயமும் உள்ளது. அதற்கு அருகில் உள்ள பெரிய பாறை ஒன்றின் உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது ஆனால் அங்கு அவ்வளவு எளிதில் பக்தர்களால் செல்ல முடியாது. 

பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் ஒரு குடைவரை கோவில் ஆகும். இங்கு குடைவரையில் குன்றின் பாறையிலேயே செதுக்கப்பட்ட விநாயகர் ஆலயமும் உள்ளது. 

''சிவ தலங்களில் இந்த திருக்கோளக்குடி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் காயிலாயத்திற்கு ஈடானதாகவும் கூறப்படுகிறது''

அகத்தியர் தவம் செய்த தலமாகும்.  


ஆனித்திருவிழா

               

கொடிமரம்

முதலாம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆனித்திருவிழா அன்று சுவாமி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்படும். அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெறும்.

சாமி ஊர்வலம்




அன்றிலிருந்து பத்து நாட்களுக்கு காலையிலும் இரவிலும் சாமி ஊர்வலமும் ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டார கிராமமக்களின் மண்டகபடியும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதானங்களும்  வழங்கப்படும். 5 ஆம் நாள் குன்றக்குடி அடிகளார் அவர்களின் மண்டகபடியும் நடைபெறும். 

தேர்



9ம் நாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள் குறுகளான சாலை மண்தரை ஆகியவற்றை கடந்து தான் தேரை இழுப்பார்கள் பல நேரங்களில் மண்ணில் தேரின் சக்கரம் புதைந்து கொள்ளும். அந்நேரங்களில் மிகவும் சிரமப்பட்டே  தேரை இழுப்பார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும். சில வருடங்களுக்கு முன்பு தேர் செல்ல தார் சாலை கிடையாது. மண் பாதை தான் இருக்கும். இந்த மண் பாதை வழியாக தேர் செல்லும் போது மண்ணில் தேரின் சக்கரம் புதைந்து இடையூரு ஏற்படும்.

தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து தேரை இழுக்க முடியாமல் இரண்டு நாட்கள் வரை தேரோட்டம் இங்கு நடந்த வரலாறும் உண்டு. அதன் பின்னர்  தேரின் உயரம் மட்டும் எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் தற்போது அந்த இடையூருகள் குறைந்துள்ளது. 
திருக்கோளநாதரும் ஆத்மநாயகியும்


10ம் நாள் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடைபெறும். 11 ம் நாள் அதிகாலை மீண்டும் சாமி மலை ஏறும் நிகழ்வு நடைபெறுவதோடு ஆனித்திருவிழா நிறைவுபெறும். 




 

திங்கள், 17 ஜூன், 2024

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து. west Bengal train accident . பலி எண்ணிக்கை அதிகரிப்ப தால் அச்சம்..

 



மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜ்லிங்க் மாவட்டத்தின் சிலிகுரியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிலிகுரியில் சிக்னலுக்காக கன்ஜன்சுங்கா என்ற பயணிகள் ரயில் காத்திருந்திருக்கிறது. அப்போது இந்த ரயிலுக்கு பின்னால் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பயணிகளின் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

        


முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் சிக்னல் போடப்பட்டிருப்பதையும் தாண்டி நிற்காமல் வந்து பயணிகள் ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. இந்த விபத்திற்கு சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை கவனிக்காமல் வந்தாரா அல்லது சிக்னல் வேலைசெய்யாமல் போனதால் நடைபெற்றதா என விசாணை நடைபெற்று வருகிறது. ஒரே தண்டவாளத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் வந்தது எப்டி என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விபத்து குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புபடைகளை அனுப்பியிருப்பதாகவும் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆயிரத்து ஒரு மாடுகளுடன் வடகொரிய நாட்டிற்கு சென்ற ஹுன்டாய் கம்பனி ஓனர்..? Hyundai company owner. history tamil.


 

ஹுன்டாய் கம்பனி 1967ல் தென்கொரிய நாட்டில் சுங்-யூ-யுங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட இந்த நிறுவனம் பல லட்சம் கார்களை விற்றுள்ளது. 

இந்த கம்பனியை தொடங்கிய சுங்-யூ-யுங் வடகொரிய நாட்டை சேர்ந்தவராவார். அதாவது 1950 முன்பு வரை வடகொரியாவும் தென்கொரியாவும் ஒன்றாக தான் இருந்தது. வடகொரியாவின் ஒரு கிராமத்தில் விவசாயகுடும்பத்தில் பிறந்த இவருக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் இவரது குடும்ப சூழலால் கல்வியை தொடரமுடியாத இவர் அவரது அப்பாவுடன் பண்ணை ஒன்றில் வேலை செய்தார். 

அங்கு வேலை செய்ய பிடிக்காத இவர் தனது நன்பருடன் 4 முறை அவரது வீட்டில் இருந்து தப்பி சென்று சில இடங்களில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால் அவரது தந்தை இவரை கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார். அதன் பிறகு வடகொரியாவிலேயே 1940 காலகட்டத்தில் அவரது நண்பர் ஒருவருடைய கேரேஜை வாங்கி கார்கலை பழுதுபார்க்கும் வேலையை தொடங்கினார். 

3 ஆண்டுகளில் 20 பணியாளர்களுடன் சிறப்பாக பணிகளை செய்துவந்த இவருக்கு ஜப்பான் ஏகாதிபத்தியத்தியத்தால் இடையூருகள் ஏற்படவே மீண்டும் தென்கொரியாவிற்கு செல்ல நினைத்த இவருக்கு அங்கு சென்று தொழில் தொடங்க பணம் தேவைபட்டது. அந்த பணத்தேவைக்காக  அவரது தந்தையின் பண்ணையில் இருந்த ஒரு மாட்டை விற்று அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தென் கொரிய நாட்டிற்கு வந்துள்ளார். தென்கொரியாவில் சுங்-யூ-யுங் ஹுன்டாய் மோட்டார் கம்பனியை உருவாக்கி தொழிலை தொடங்கினார். 

இந்த நிலையில் தான் 1950ல் தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே போர் மூண்டது. 3 ஆண்டுகளுக்கு பின் போர் முடிவுக்கு வந்த நிலையில் தான் வடகொரியா தங்களது நாட்டை மூடி வடகொரிய நாட்டை சார்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடைவிதித்தது. இதனால் சுங்-யூ-யுங் கின் பெற்றோர் வடகொரியாவிலும் சுங் தென்கொரியாவிலும் மாட்டிக் கொண்டனர்.  

அதன் பிறகு சுங் கின் ஹுன்டாய் நிறவனம் பன்மடங்கு வளர ஆரம்பித்து உலகளாவிய அளவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. அதன் பிறகு ஹுன்டாய் ஒனர் சுங் தென்கொரியாவின் உட்கட்டமைப்புகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். 

வடகொரிய தென்கொரிய பிரிவிற்கு பிறகு இருநாடுகளுக்கும் இடையே யாரும் சென்றது கிடையாது. இந்நிலையில் தான் 1998ல் சுங் 1001 மாடுகளுடன் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு செல்ல முடிவு செய்தார். காரணம் இவர் வடகொரியாவிலிருந்து தென்கொரிய நாட்டிற்கு வரும்பொழுது பணத்தேவைக்காக ஒரு மாட்டை விற்று தான் தென்கொரியா வந்தார். அந்த ஒரு மாட்டிற்காக 1000 மடங்கு தான் திருப்பி தருவதற்காகவே 1001 மாடுகளுடன் தென்கொரிய எல்லையை தாண்டி வடகொரியாவிற்கு சென்றார். கொரியா இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு இந்த எல்லையை கடந்து சென்ற முதல் நபராவார். 

அது மட்டுமல்லாது வடகொரியாவின் வளர்சிகாகவும் நிதி வளங்க திட்டமிட்டிருந்தார் சுங்-யூ-யுங்.. 

சனி, 15 ஜூன், 2024

மஹாராஜா படம் எப்படி இருக்கு..? MAHARAJA movie review.. vjs new movie.. யாருடா அந்த லக்‌ஷ்மி..?

 


மஹாராஜா 

               விஜய் சேதுபதியின் 50 வது படம் மஹாராஜா. ஜுன் 14 தேதி வெளியான இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதனின் இரண்டாவது படமாகும்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி, அபிராமி , அனுராக் காஷ்யப் மற்றும் மம்தா  மோகன்தாஸ்  நடராஜன் சுப்ரமணியம், அபிராமி, முனிஷ்காந்த், சிங்கம் புலி மற்றும் பலர் துணைநடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தில் விஜய் சேதுபதி முடி திருத்தும் கடை நடத்துபவராக வருகிறார். இவரது மனைவி விபத்தில் உயிரிழந்த நிலையில் இவரது மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் சேதுபதி வீட்டில் கொள்ளை நடைபெறுகின்றது. அது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறார் விஜய் சேதுபதி.  அங்கு தொடங்கிய கதையின் விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் படத்தின் இறுதி வரை தொடர்கிறது. 

படத்துன் முதல் பாதியில் இடம் பெறும் பல காட்சிகள் எதற்காக வருகிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது படத்தின் இரண்டாம் பகுதி தொடங்கியவுடன் தான் இதுக்கு தான் அதுவா என்று ரசிகர்களை வியக்க வைத்ததுள்ளார் இயக்குனர் நிதிலன். தனது 50 வது படத்தில் பெரிதாக ஆரவாரம் இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களை ஆரவாரம் செய்யவைத்துவிட்டார்.

சில வருடங்களாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்களை விட அவர் வில்லனாக நடித்த படங்களே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அதை உடைத்துள்ளார் விஜய் சேதுபதி.  

மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  படத்தில் காதல் காட்சிகள் பாடல்கள் நகைச்சுவைகளுக்கு பெரிதாக இடமில்லை என்றாலும் படம் பக்கா மாஸ்..  மேலும் படத்தின் எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர்களும் மிகச் சிறப்காக செயல் பட்டிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. 


வெள்ளி, 14 ஜூன், 2024

குவைத்தில் 5 தமிழர்கள் மற்றும் 29 மலையாளிகள் உட்பட 50 மேற்பட்ட உயிரிழப்பு.. Kuwait fire accident death count..?




கடந்த 12ம் தேதி அதிகாலை குவைத் நாட்டின் மாங்காஃப் பகுதியில் உள்ள இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 5 பேர் தமிழர்கள் என்றும் 29 பேர் மலையாளிகள் என்று தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல்களை தங்களிடம் கொண்டுவந்து தருமாறு மத்திய மாநில அரசாங்ககளுக்கு  கண்ணீர் மல்க கோரிக்கை  வைத்துவருகின்றனர். உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இங்கு கொண்டு வருவது குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யவேண்டிய உதவிகள் குறித்தும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் தாங்கள் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இனைந்து அலோசனை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 29 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பது கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டுவருவதற்கும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.. 

விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு வேண்டிய உதவிகளை குவைத் நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் செய்து வருகிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஆஃபிரகாம் என்பவருக்கு சொந்த மான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.


இந்த விபத்து குறித்து உயிர்தப்பியவர்கள் கூறியதாவது  இந்த குடியிருப்பில் 150 மேற்பட்டோர் இருந்ததாகவும் ஒரு அறையில் 7 பேர் வரை தங்கியிருந்ததாகவும் அதிகாலையில் 4 மணியளவில் கட்டிடத்தின் பாதுகாவலர்கள் அறையில் தீபற்றியுள்ளது. ஆனால் அப்போது பாதுகாவலர்கள் அறையில் இல்லை என்றும் கூறப்படுகின்றது இதனால் அங்கு பற்றிய தீ அடுத்த அடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூங்கிக் கொண்டு  இருந்துள்ளனர். அவர்கள் தூக்கத்திலிருந்து என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்ளாகவே தீவேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

தீயில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் தீபற்றி எரிந்ததால் அவர்களால் வெளியே வரமுடியாமல் கட்டிடத்தின் மாடிக்கு செல்ல முயன்றுள்ளனர் ஆனால் அந்த கதவு பூட்டபட்டு இருந்ததால் மாடிக்கும் செல்லமுடியால் தவித்துள்ளனர் அப்போது கரும்புகை பரவி மூச்சுதிணறல் எற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்.  பலர் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக சன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு கீழே குதித்ததில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாவலரின் அறையில் தீபற்றகூடிய பொருள் இருந்ததா என்று விசாரனை நடைபெற்று வருகின்றது. 

இந்த விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வியாழன், 13 ஜூன், 2024

தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் குவைத் தீவிபத்தில் பலி..? 50 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி.. Kuwait fire accident..

  



குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாங்காஃப் பகுதியில் உள்ள பணியாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்ப்பட்ட தீவிபத்தில் 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.. 

தீவிபத்து;

                    கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தான் புதன் கிழமை காலை 4 மணியளவில்  தீவிபத்து ஏற்பட்டுள்ளது.. அடுக்குமாடி குடியிருப்பின் சமையலரையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ மளமள வென்று பரவி அங்கிருந்த சமையல் சிலிண்டர்களிலும் தீபற்றி எரிந்துள்ளது.. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் தீயில் கருகியும் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவிய கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக கீழே குதித்தும் 40 மேற்பட்ட தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர். 

விபத்திற்கான காரணம்

                                               தீவிபத்து குறித்து தகவல் அறிந்த குவைத் அரசாங்கம் முழுவீச்சில் தீயணைக்கும் பணியிலும் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் சமையல் அறையில் ஏற்பட்ட மின்கசிவே  தீவிபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.. 

இந்தியாவின் நடவடிக்கை 

                                                தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தவுடனே அங்கு சென்று முகாமிட்டு மீட்புபணிகளில்  இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகின்றனர்.. 

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி ,  தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.   பிரதமர் மோடி உத்திரவின் பேரில் குவைத் நாட்டிற்கு விரைந்துள்ள வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரிப்பதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் குறித்து ஆய்வு செய்தார்.



உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறையை நாடியுள்ளார்.

இதுவரை இரண்டு தமிழர்களை காணவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர்கள் குறித்து அரசாங்கமும் அயலக தொழிலாளர் நலச்சங்ககளும் தேடிவருகின்றனர். குவைத் அரசாங்கத்துடன் இணைந்து இந்திய வெளியுறவுத்துறையும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் தீவிபத்து குறித்து தகவல் அறிய அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து சம்பவம் இந்தியா  மற்றும் குவைத் நாட்டுமக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் அவர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இந்த தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து குவைத் அரசாங்கம் சம்மந்தப் பட்ட சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.. 

குடும்ப சுமைகாரணமாக சொந்த நாட்டை வி்ட்டு குவைத் நாட்டிற்கு சென்று பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்..



புதன், 12 ஜூன், 2024

MrBeast க்காக Billboard வைத்த தமிழ் டாப் யூடியூப்பர்ஸ்.. A2D ..

 



பிரபல அமேரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் என்ற நபருக்கு தமிழ் டாப் யூடியூபர்கள் இணைந்து சென்னையில் ஆறு இடங்களில் மிகப்பெரிய கட்அவுட்கள் வைத்துள்ளனர். 

காரணம்;

2019ம் வருடத்தில் உலகத்தில் அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியூபர்களாக அமேரிக்காவை சார்ந்த பியூடிபை மற்றும் இந்தியாவை சேர்ந்த டி சீரிஸ் நிறுவனமும் இருந்தது. இந்நிலையில் டிசீரிஸ் நிறுவனம் இந்திய மக்களிடையே வீடியே ஒன்றை வெளியிட்டு உலகிலேயே அதிக சந்தாதார்ர்களை கொண்ட யூடியூப் சேனலாக இந்தியாவை சேர்ந்த சேனல் தான் இருக்க வேண்டும் என்றும் அதனால் அமேரிக்க சேனலான பியூடிபை னேனலை பின்னுக்கு தள்ள டீசிரிஸ் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுமாறு கூறியது..

இதனை தொடர்ந்து இந்தியர்கள் பலரும் டீசிரிஸ் சானலுக்கு சப்ஸ்க்கிரைப் செய்து அமேரிக்க பியூடிபை சேனலை பின்னுக்கு தள்ளி இந்திய டீசீரிஸ் சேனலை உலகின் அதிக சப்ஸ்க்ரைப்பர் உள்ள சேனலாக கொண்டு வந்தனர்.  அதற்கு பியூடிபை கார்பரேட் சேனல்களை மக்கள் ஆதரிப்பதை தவிற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.. அந்த போட்டியில் பியூடிபை தோற்றுபோனார்.

அதன் பிறகு டீசிரிஸ் நிறுவனம் ஹிந்தி படங்களின் பாடல்களை வெளியிட்டுவந்தது .. அந்த பாடல்களை மற்ற தனிநபர் யூடியூப் சேனல்கள் பயன்படுத்தினாலோ அல்லது அந்த பாடல்களை பாடினாலோ அந்த சேனல்களுக்கு காபிரைட்ஸ் ஸ்ட்ரைக் கொடுத்து வந்துள்ளது.. 



A2D CHANNEL :

                       இந்நிலையில் தான் 5வருடங்கள் கழித்து மீண்டும் உலகின் அதிக சப்ஸ்க்கரைபர் கொண்ட சேனல் என்ற இடத்திற்கு போட்டியாக மிஸ்டர் பீஸ்ட் என்ற தனிநபரால் நடத்தப்படும் சேனல் போட்டிக்கு வந்தது.  இதனை கண்ட டீசிரிஸ் நிறுவனம் மீண்டும் இந்திய மக்களிடையே அமேரிக்க சேனலை தோற்கடித்து இந்திய சேனலை மீண்டும் வெற்றி பெற வைக்குமாறு கூறி வீடியே வெளியிட்டு இருந்தது.. 

ஆனால் இந்த முறை மக்கள் ஒரு நிறுவனத்தை வெற்றி பெறவைப்பதை விட தனிநபரை வெற்றி பெற வைப்பதுதான் சிறந்தது என்றும் அப்பொழுதுதான் சமூக ஊடகங்கள் மக்களின் கைகளில் இருக்கும் என்றும் இது போன்ற நிறுவனங்களை ஆதரிப்பது என்றும் சமூக ஊடகங்களில்  தனிநபருக்கான வாய்பை தட்டிபரிக்கும் என்பதால் இம்முறை மக்கள் டீசிரிஸ் சேனலை ஆதரிக்கவில்லை..

சமூக ஊடகம் என்பது சமூகத்தில் இருந்து ஒருவர் வீடியோக்களை உருவாக்கி ஆதனை சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார். அந்த வீடியோவை இந்த சமூகத்தில் வசிக்கும் மக்களாகிய நாம் பார்கின்றோம், அதற்கு பெயர்தான் சமூக ஊடகம் ஆகும்.

இதில் நிறுவனங்கள் சமூகஊடகங்களை ஆக்கிரமித்து தனிநபர் உருவாக்கும் வீடியோக்களுக்கு ஸ்ட்ரைக் குடுப்பது என்பது மிகவும் கண்டிக்க தக்கதென்றும் இது தனி நபர் உருவாக்கும் சேனல்ளை பாதிக்கும் என்றும் A2D டெக் சேனல் நந்தகுமார் அவரது வீடியோவில் தெரிவித்ததோடு அமேரிக்க யூடியூபரான மிஸ்டர் பீஸ்டிற்கு சப்ஸ்க்ரைப் செய்து டீசிரிஸ் சேனலை பின்னுக்கு தள்ளி தனிநபர் சேனலான  மிஸ்டர் பீஸ்ட்டை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறி அவரது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்..


மிஸ்டர் பீஸ்டின் வெற்றி;

                                                அனைவரும் எதிர்பார்த்தது போலவே டீசிரிஸ் நிறுவனத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி மிஸ்டர் பீஸ்ட் என்ற தனிநபர் உலகின் அதிக சப்ஸ்க்ரைபர் கொண்ட யூடியூப் சானலாக உருவெடுத்துள்ளார்.. இது உலகில் உள்ள அனைத்து தனி நபர் வீடியோ கிரியேட்டர்களின் வெற்றியாகவே பார்க்கபடுகின்றது.

278 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று உலகின் நம்பர் ஒன் யூடியூபராக உருவவெடுத்துள்ள மிஸ்டர் பீஸ்டிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக A2D சேனல் நந்தகுமார் தமிழில் உள்ள டாப் யூடியூபர்களுடன் இணைந்து நான்கு லட்சம் செலவில் சென்னையில் ஆறு இடங்களில் மிஸ்டர் பீஸ்டிற்கு பில்போர்டு வைத்துள்ளார்..

இதில் நந்தகுமாருடன் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி,  விஜே சித்து, இர்பான், ஜேகே, பிளிப்பிளிப்,மதன்கௌரி, தருன்குமார் ஆகிய யூடியூபர்கள் இணைந்து வைத்துள்ளனர்..

A2D நந்தகுமார்;

        இது குறித்து நந்தகுமார் அவரது வீடியோவில் தெரிவித்திருப்பதாவது சமூக ஊடகங்கள் என்றும் சமூகத்தின் கையிலேயே இருக்க வேண்டும் என்றும் இந்த வெற்றி மிஸ்டர் பீஸ்டிற்கானது மட்டுமள்ளாது இந்த தனிநபர் VS கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து அதில் தோற்று போன பியூடிபை கான வெற்றியாக இதை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்... 

செவ்வாய், 11 ஜூன், 2024

மோடி 3.0 அவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியல்...

 


நடந்து முடிந்த நாடாளுமண்ற தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இனைந்து மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ளது. கடந்த 9ம் தேதி நரேந்திர தமோதரதாஸ் மோடி மூன்றாவது முறையாக இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பொறுப்பேற்றார்.. அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு;

சாலை போக்குவரத்து துறை;


நிதின் கட்கரிக்கு சாலை போக்குவரத்து துறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ்மல்கேத்ரா மற்றும் அஜய் தம்டா நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு துறை;
       ராஜ்நாத் சிங் 
 


நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக வின் முன்னாள் தலைவராகவும், 2015 காலகட்டத்தில் பிரதமர் மோடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது பொறுப்பு பிரதமராகவும் இருந்துள்ளார்..

வெளியுறவுத்துறை;

                                   

வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். 2019 லிருந்து வெளியுறவுத்துறையில் பணியாற்றிவரும் ஜெய்சங்கர் கடந்த காலங்களில் தனது பணியை மிகச்சிறப்பாக கவனித்துவந்துள்ளார்..

உள்துறை ;


உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடியின் வலதுகரமாக அறியப்படும் அமித்ஷா மோடியின் குஜராத்  அமைச்சரவையிலும் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

வேளாண்துறை;
                          

                வேளாண்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சரும் ஆவார்.

மின்சாரத்துறை;


மின்சாரத்துறை அமைச்சராக மனேகர்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹரியான மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராவார்..

நிதித்துறை;


நிதித்துறை அமைச்சராக மீண்டும் நிர்மலா சீதா ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் ஏற்கனவே பாதுகாப்புதுறை அமைச்சராகவும். நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

கல்வித்துறை;


கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுள்ளார். 


வர்த்தகதுறை 

வர்த்தக துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் ஜவுளிதுறை மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் பதவி வகுத்துள்ளார்..

சுகாதாரத்துறை;

சுகாதாரத் துறை அமைச்சராக ஜெ.பி. நட்டா பொறுப்பேற்றுள்ளார். இவர் 2014 முதல் 2019 வரையிலான மோடியின் முதல் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

சுற்றுலாத்துறை;





சுற்றுலாத்துறை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பொறுப்பேற்றுள்ளார். இவர் 2017ல் வேளான் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைஅமைச்சராகவும் பதவிவகித்துள்ளார்.

சுரேஷ் கோபி;

  

சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று மோடியின் அமைச்சரவையிலும் இடம் பிடித்துள்ளார். இவருக்கு சுற்றுலாத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வளங்கப்பட்டுள்ளது..


நாடாளுமண்ற விவகாரத்துறை;



நாடாளுமண்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜூ நியமிக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஏற்கனவே சட்ட அமைச்சராகவும் புவியியல் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

விமான போக்குவரத்து துறை;


விமான போக்குவரத்து துறை அமைச்சராக ராம் மோகன் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவர். 

ஜவுளித்துறை;


ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் பொறுப்பேற்றுள்ளார். பிகாரை சேர்ந்த இவர் பிகார் மாநிலத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகின்றார்.

கனரக தொழில் துறை;

கனரக தொழித்துறை அமைச்சராக குமாரசாமி பொற்ப்பேற்றுள்ளார். இவர் கர்நாட மாநிலத்தின் முதலமைச்சராகவும், எதிர் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தொலைத்தொடர்புத் துறை;


ஜோதிராதித்ய சிந்தியா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராவார்.
2012 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் இவர் மின்சாரம் மற்றும் பெருநிருவனங்களுக்கான மாநில அமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை;

தகவல் தொழில் நுட்பத் துறை இனை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இவரும் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை ;


சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக விரேந்திர குமார் பொறுப்பேற்றுள்ளார்.

ரயில்வே துறை ;

ரயில்வே அமைச்சராக அஷ்வினி வைஷ்னவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் IAS 
 அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.


துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து ;


துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக சர்பானந்த சோனாவால் பதவியேற்றுள்ளார். இவர் அசாம் மாநிலத்தின் முன்னால் முதலமைச்சராவார்.


நிலக்கரி மற்றும் சுரங்க்கத்துறை;

நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக கிஷன் ரெட்டி பதவியேற்றுள்ளார். 

விளையாட்டுத்துறை;

விளையாட்டுத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டாவியா பதவியேற்றுள்ளார்.இவர் குஜராத் சட்டமன்ற உறுப்பினராகவும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மற்றும் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

சுற்றுசூழல் துறை;


சுற்றுசூழல் துறை அமைச்சராக பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றுள்ளார் .
மேலும் இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.


நீர்வளத்துறை இணை அமைச்சர்;

நீர்வளத்துறை இணை அமைச்சராக கர்நாடக மாநிலத்தை சார்ந்த சோமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.. 

நீர்வளத்துறை;




நீர்வளத்துறை அமைச்சராக சீ.ஆர். பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளார்...






திங்கள், 10 ஜூன், 2024

மோடி 3.0 விற்கு அதிர்ச்சி குடுத்த கேரள MP. சுரேஷ் கோபி. மீண்டும் மீண்டுமா..!

   



பிரபல மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி கேரள மக்களிடம் தன்

நடிப்பினால் மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதன் மூலமும் மிக பிரபலமானவர். பின்பு இவர் தன்னை பாஜக வில் இனைத்துக் கொண்டார்.
இன்னிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நின்று 
வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலம் முதன் முறையாக பாஜக கேரளாவில் கால் ஊன்றவும் வைத்தார் சுரேஷ் கோபி. 9 ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாஜக இவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவி பிரமாணமும் செய்து வைத்தார்..

இந்நிலையில் தான் சுரேஷ் கோபி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும். மேலும் தான் நிறைய படங்களில் நடித்து வருவதால் தற்போது தான் அமைச்சராக பதவியேற்றால் அந்த படங்களில் நடிப்பதற்கு தடை ஏற்படும் எனவே தான் அமைச்சர் பதவியை ராஜினமா செய்வதாகவும், MP பொறுப்பிலிருந்தே மக்களுக்காக உழைப்பேன் என்றும் செய்திகள் வெளியானது.



   




இந்நிலையில் பலரும் அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் கட்சி முடிவு செய்த பொழுதே கூறியிருக்க வேண்டியதுதானே. பின்னர் ஏன் பதவியேற்று பின்னர் ஏன் பதவிவிலக வேண்டும் என்றும், நடிப்பு தான் முக்கியம் என்றால் ஏன் MP பதவியில் மட்டும் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் சுரேஷ் கோபி வெளியிட்டுள்ள செய்தியில் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் தான் தொடர்ந்து பிரதமர் மோடி அமைச்சரவையிலிருந்து கேரள மக்களின் நலனுக்காக உழைப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும், அதனால் நான் அமைச்சராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.. 
 

கேரள மாநிலம் கொள்ளத்தில் பிறந்த சுரேஷ் கோபி மலையாள படங்களில் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், சிறந்த நடிகருக்கான கேரள விருதையும் பெற்றுள்ளார். 










என்னது பெட்ரோல் போடும் போது செல்போன் யூஸ் பண்ணா தீ பிடிக்காதா..? பெட்ரோல் பங்க் உருட்டு..!

  நீங்க பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பங்க்கு பெட்ரோல் போட போயிருக்கும் போது செல்போன் \யூஸ் பண்ணா யூஸ் பண்ணாதிங்க னு சொல்லியிருப்பாங்க.. ஏன்ன...